வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லுாரிக்கு இன்று அமைச்சர் ராஜ்நாத்சிங் வருகை

குன்னுார்: குன்னுார் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லுாரிக்கு, இன்று ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் வருகை தர உள்ளார்.நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லுாரியில், உள்நாடு மட்டுமின்றி நட்பு நாடுகளின் முப்படை இளம் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.நடப்பாண்டு, 80வது பயிற்சி நிறைவு பெற உள்ள நிலையில், 2 நாள் பயணமாக, இன்று (9ம் தேதி) ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் வருகை தர உள்ளார்.

Latest Tamil News

நாளை காலை போர் நினைவு சதுக்கத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். பிறகு, முப்படை பயிற்சி இளம் அதிகாரிகள் மத்தியில் நடக்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசுகிறார்.

இதனையொட்டி, ராணுவ மையம் அமைந்துள்ள பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக, நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா, எஸ்.பி., நிஷா தலைமையில், அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. சாலை மார்க்கமாக வருகை தருவதால், கான்வாய் ஒத்திகையும் நடத்தப்பட்டது. ராணுவ பயிற்சி கல்லுாரி பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.