
கோவை; கிழிந்த நிலையில் பறந்த தேசியக்கொடியை மாற்றாத, ரயில்வே ஸ்டேஷன் நி ர்வாகத்துக்கு, கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியன் ரயில்வே, தென்னக ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட 8 ரயில் நிலையங்களில், பிரமாண்ட தேசியக்கொடி அமைக்க உத்தரவிட்டது.இதனையடுத்து சேலம் ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட கோவை ரயில்வே ஸ்டேஷனின் முன்புறம், 100 அடி உயரத்தில் கொடி கம்பம் அமைக்கப்பட்டது. இதில் 30 அடி நீளம், 20 அடி உயரத்தில் 9.5 கிலோ எடையுள்ள தேசியக் கொடி 2019ம் ஆண்டு ஏற்றப்பட்டது. ஆனால், இக்கொடி முறையாக பராமரிக்கப்படாததால், கிழிந்த நிலை யில், பறந்து கொண்டிருந்தது. இது தேசப்பற்றாளர்களை கடும் மனவருத் தத்துக்கு உள்ளாக்கியது. ரயில்வே நிர்வாகத்துக்கு தெரிவித்தனர். நேற்று மாலை, சேதமடைந்த தேசியக்கொடி மாற்றப்பட்டது.கோவை ரயில்வே ஸ்டேஷன் மேலாளர் ஸ்ரீதர் கூறுகையில்,”புகார் வந்த உடன் தேசியக் கொடி மாற்றப்பட்டது,” என்றார்.
Leave a Reply