கோவையில் நிகழ்ச்சிகளில் பங்கேற்பு: துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், இன்று காலை 10 மணிக்கு விமானத்தில், கோவை வருகிறார்.

கோவை நிகழ்ச்சிகளில் பங்கேற்பு

துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், இன்று காலை 10 மணிக்கு விமானத்தில், கோவை வருகிறார். கொடிசியா அரங்கில், சிட்டிசன் போரம் சார்பில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
மதியம் 12:30 மணிக்கு, சர்க்யூட் ஹவுசில் உணவு, ஓய்வுக்குப்பின், மதியம் 2:30 மணிக்கு டவுன்ஹாலில் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு, மரியாதை செலுத்துகிறார். பேரூர் தமிழ் கல்லுாரியில் நடைபெறும், சாந்தலிங்க ராமசாமி அடிகளார் நுாற்றாண்டு நிகழ்ச்சியில், மாலை 3:00 மணிக்கு பங்கேற்கிறார். மாலை 5:15 மணிக்கு திருப்பூர் செல்கிறார்.
அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின், மதுரை செல்கிறார். துணை ஜனாதிபதி வருகையை முன்னிட்டு, கோவையில் மாநகர போலீஸ் கமிஷனர் தலைமையில், ஆறு துணை கமி ஷனர்கள், 15 உதவி கமிஷனர்கள், 40 இன்ஸ்பெக்டர்கள், 157 எஸ்.ஐ.,கள், 1,093 போலீசார் என, 1,311 பேரும், கோவை மாவட்ட போலீசார், 750 பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.