பொள்ளாச்சி; பொள்ளாச்சி மாட்டு சந்தை வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில், கூடுகிறது. ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்கள், தஞ்சாவூர், கும்பகோணம், ஒட்டன்சத்திரம், ஈரோடு, திருப்பூர், சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பல்வேறு ரக மாடுகள் விற்பனைக்கு வருகின்றன.மாட்டுச்சந்தையில், செவ்வாய் கிழமையில், நான்காயிரத்துக்கு மேற்பட்ட மாடுகளும், வியாழக்கிழமைகளில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மாடுகளும் விற்பனைக்கு வருகின்றன. பொள்ளாச்சி சந்தையிலிருந்து பெரும்பாலும் கேரளாவிற்கு மாடுகள், வளர்ப்பு மற்றும் இறைச்சிக்காக கொண்டு செல்லப்படுகின்றன.

சந்தையில், வாரந்தோறும் இரண்டு கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெறுகிறது. நேற்று சந்தைக்கு வெளிமாநிலங்கள், பல மாவட்டங்களில் இருந்து மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.
மாட்டு வியாபாரிகள் கூறியதாவது: பொள்ளாச்சி மாட்டுச்சந்தைக்கு, மாடு வரத்து அதிகரித்து காணப்பட்டது. மொத்தம், 2,500 மாடுகள் வரத்து இருந்தது. வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது.நாட்டு காளை, 75 – 80 ஆயிரம் ரூபாய், நாட்டு பசு, 40 – 45 ஆயிரம், நாட்டு எருமை, 50 – 55 ஆயிரம் ரூபாய், முரா எருமை 70 – 75 ஆயிரம் ரூபாய், ஜெர்சி ரக பசு 30 – 35 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டன.
கேரளா வியாபாரிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. மாடுகளின் வரத்து அதிகமாக இருந்ததால், வியாபாரமும் விறுவிறுப்பாக நடந்தது. நேற்று மட்டும், 3 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.
Leave a Reply