தமிழ் பாடத்துக்கு ஆறு பாடவேளை; பாரதியார் பல்கலை உத்தரவு

கோவை ; அனைத்து இளநிலை பட்ட வகுப்புகளுக்கும் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு தமிழ்மொழி பாடத்துக்கு ஒரு வாரத்துக்கு ஆறு மணி நேர பாடவேளையை பின்பற்ற வேண்டும் என, பாரதியார் பல்கலை உத்தரவிட்டுள்ளது.பாரதியார் பல்கலையில், 2022 – 23ம் கல்வியாண்டில் பி.காம்., பி.பி.ஏ., பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய படிப்புகளுக்கு தமிழ் பாடவேளை, 4 மணி நேரமாக குறைக்கப்பட்டது. பிற பாடங்களுக்கு, 6 மணி நேரமாக பாடவேளை ஒதுக்கப்பட்டது.இந்நிலையில், அனைத்து துறைகளுக்கும் தமிழ் பாடவேளை, 4 மணி நேரமாக குறைக்கப்பட்டு இருப்பதாக தமிழ் ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர். இந்நிலையில், பல்கலை சார்பில் அனைத்து இளநிலை பட்ட வகுப்புகளுக்கும் முதல், இரண்டு ஆண்டுகளுக்கு தமிழ்மொழி பாடத்துக்கு வாரத்துக்கு ஆறு மணி நேர பாடவேளையை கட்டாயம் பின்பற்ற மீண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது.