கோவையில் அரசுப்பள்ளி மாணவர்கள், சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்க, ‘ஸ்போர்ட்ஸ் ஸ்கூல் ஆப் எக்சலன்ஸ்’ எனும் சிறப்பு பயிற்சி மையங்கள் அமையவுள்ளன. விளையாட்டு பயிற்சிகளுக்கான அனைத்து வசதிகளுடன், இந்த மையங்கள் உருவாக்கப்பட உள்ளன.விளையாட்டில் அரசுப்பள்ளி மாணவர்களின் திறன்களை ஊக்குவிக்க, ரூ.9 கோடி மதிப்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 2 விளையாட்டு சிறப்பு பள்ளிகள் உருவாக்கப்படும் என, 2023ல் பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.

அதன்படி, நான்கு பள்ளிகளை பரிந்துரைக்க அரசு உத்தரவிட்டது. சீரநாயக்கன்பாளையம் அரசுமேல்நிலைப்பள்ளி, தொண்டாமுத்தூர், ஒண்டிப்புதூர், மேட்டுப்பாளையம், சூலூர், சின்னதடாகம் மற்றும் பொள்ளாச்சி நகராட்சி ஆகிய பகுதிகளில் செயல்படும், ஆண்கள் மேல் நிலைப்பள்ளிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இந்த பள்ளிகளில் இருந்து இரண்டு பள்ளிகள், ‘ஸ்போர்ட்ஸ் ஸ்கூல் ஆப் எக்சலன்ஸ்’ ஆக தரம் உயர்த்தப்பட உள்ளன.
மாவட்ட கல்வி அதிகாரி கூறுகையில், ‘மாணவர்கள் வசதியாக பயிற்சி பெறும் வகையில், பள்ளியின் இடம், மைதானம் போன்ற அம்சங்களை கணக்கில் கொண்டு, தேர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தேர்வாகும் பள்ளிகளில் வாலிபால், பாஸ்கெட் பால், தடகளப் போட்டிகளுக்கான டிராக் உள்ளிட்ட உள்கட்டமைப்பு உருவாக்கப்படும். காலை, மாலையில் பயிற்சி அளிக்க தகுந்த உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். ஊட்டச்சத்து உணவு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply