கோவையில் சொத்து வரி செலுத்த சூப்பர் சான்ஸ்.. மாநகராட்சியின் முக்கிய அறிவிப்பு.. நோட் பண்ணுங்க

கோவை: கோவை மாநகராட்சிப் பகுதியைச் சேர்ந்த மக்கள் எளிமையாக தங்கள் வீட்டின் அருகில் உள்ள பகுதிகளிலேயே சென்று சொத்து வரி உள்ளிட்ட முக்கிய வரிகளை செலுத்தும் வகையில் சிறப்பு முகாம் இன்று, நாளை (மார்ச் 1, 2) பல்வேறு பகுதிகளில் நடைபெறவுள்ளது. எந்தெந்த பகுதிகளில் எல்லாம் இந்த முகாம் நடைபெறவுள்ளது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
கோவை மாநகராட்சிக்கு வருவாய் வழங்குவதில் முக்கியப் பங்கு வகிப்பது சொத்துவரி, காலியிட வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் மற்றும் வரியில்லா இனங்கள் உள்ளிட்ட வரிகள்தான். இந்த வரிகள் மூலமாகத்தான் கோவை மாநகராட்சிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், சொத்து வரி ஆறு மாதத்துக்கு ஒருமுறையும், குடிநீர் கட்டணம் இரு மாதத்துக்கு ஒருமுறையும் வசூலிக்கப்படுகிறது.


கோயம்புத்தூர் மாநகராட்சியில் நடப்பு 2024-25 ஆம் நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டு வரையிலான கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி மற்றும் குடிநீர் கட்டணம் முதலிய அனைத்து வரியினங்களை பொதுமக்கள் செலுத்துவதற்கு ஏதுவாக சிறப்பு வரிவசூல் முகாம் அனைத்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் (அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக) வரிவசூல் பணி நடைபெற்று வருகிறது. மேலும், அனைத்து மண்டல வரிவசூல் மையங்கள் மற்றும் சிறப்பு வரிவசூல் முகாம்கள் மார்ச் 1, 2 ஆகிய தேதிகளில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை செயல்படும். சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடைபெறும் இடங்கள்:- வார்டு எண் 6க்கு வீரியம்பாளையம் பத்திரகாளியம்மன் கோவில் (0103.2025 சனிக்கிழமை மட்டும்), செந்தூர் திரு நகர் விநாயகர் கோவிலிலும், வார்டு எண் 78க்கு நேரு நகர் காளப்பட்டியிலும், வார்டு எண் 51க்கு சவுரிபாளையம் சொசைட்டி ஹால், மாரியம்மன் கோவில் அருகிலும், வார்டு எண் 56க்கு சுங்கம் மைதானம் ஒண்டிப்புதூரிலும் முகாம் நடைபெறுகிறது.

வார்டு எண் 58க்கு பூர்வமதி அப்பார்ட்மெண்ட் திருச்சி ரோடு (01.03.2025 சனிக்கிழமை மட்டும்), வார்டு எண் 57க்கு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, நெசவாளர் காலனி, ஒண்டிப்புதூரிலும், (02.03.2025 ஞாயிற்றுக்கிழமை மட்டும்), வார்டு எண் 35க்கு கற்பக விநாயகர் கோவில் வளாகம், தேவாங்கர் நகர், இடையர்பாளையத்திலும் (0103.2025 சனிக்கிழமை மட்டும்) முகாம் நடைபெறுகிறது. வார்டு எண் 40க்கு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பொங்காளியூர், வீரகேரளத்திலும், வார்டு எண் 75க்கு மாரியம்மன் கோவில் மைதானம், சீரநாயக்கன்பாளையத்திலும், வார்டு எண் 19க்கு அம்மா உணவகம், மணியகாரம்பாளையத்திலும், வார்டு எண் 15க்கு அங்கன்வாடி மையம், சுப்ரமணியம்பாளையத்திலும் முகாம் நடைபெறுகிறது. வார்டு எண் 11க்கு மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, காந்திமா நகரிலும், வார்டு எண் 67க்கு சுகாதார ஆய்வாளர் அலுவலகம் (SI Ward Office) காமதேனு நகர்,ஆவாரம்பாளையத்திலும், வார்டு எண் 11க்கு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, ஜனதா நகரிலும், வார்டு எண் 86க்கு சாரமேடு மெயின் ரோடு, கரும்புக்கடை (0103.2025 சனிக்கிழமை மட்டும்), வார்டு எண் 87க் கு சுகாதார ஆய்வாளர் அலுவலகம் (SI Ward Office), குனியமுத்தூரிலும் முகாம் நடைபெறவுள்ளது.
வார்டு எண் 88க்கு ஜே.ஜே.நகர், குனியமுத்தூர் (01.03.2025 சனிக்கிழமை மட்டும்), வார்டு எண் 89க்கு சுகாதார ஆய்வாளர் அலுவலகம் (SI Ward Office), சுண்டாக்காமுத்தூரிலும், வார்டு எண் 92க்கு விநாயகர் கோவில் வீதி, பி.கே.புதூரிலும்02.032025 ஞாயிற்றுக்கிழமை மட்டும்), வார்டு எண் 97க்கு ஹவுசிங் யூனிட் பேஸ்-2 பிள்ளையார்புரம் 02.03.2025 ஞாயிற்றுக்கிழமை மட்டும்) முகாம் நடைபெறுகிறது. வார்டு எண் 32க்கு சிறுவர் பூங்கா, நாராயணசாமி வீதி, சங்கனூரிலும், வார்டு எண் 63க்கு பெருமாள் கோவில் வீதி, நியூ கலெக்சன் சென்டரிலும், வார்டு எண் 80க்கு ஒக்கிலியர் காலனி பள்ளி, கெம்பட்டி காலனியிலும் முகாம் நடைபெறவுள்ளது. கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வரிவசூல் மையங்கள் மற்றும் மேற்கண்ட சிறப்பு வரிவசூல் முகாம்களும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1, 2) ஆகிய இரண்டு நாட்களிலும் வழக்கம்போல காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும். எனவே, பொதுமக்கள் இவ்வசதியைப் பயன்படுத்தி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்துமாறு மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.