தமிழகத்தில் முதன்முறையாக, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனையின் படி, கோவை மாநகராட்சி பள்ளிகளில் அறிவியல் புரட்சியை ஏற்படுத்தும் வகையில், ஏ.ஆர். மற்றும் வி.ஆர். தொழில்நுட்ப வசதிகளுடன் அறிவியல் ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
கற்றல் அனுபவத்தில் இணைக்கும் தொழில்நுட்பம்
ஏ.ஆர். (Augmented Reality) என்பது டிஜிட்டல் தகவல்கள், படங்கள், ஒலி மற்றும் 3டி மாடல்கள் போன்றவற்றை ஸ்மார்ட் போன்கள், டேப்ளெட்டுகள், ஸ்மார்ட் கண்ணாடிகள் போன்ற சாதனங்கள் மூலம் கற்றல் அனுபவத்தில் இணைக்கும் தொழில்நுட்பம். இதன் மூலம், மாணவர்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடங்களின் 3டி மாதிரிகளை தனது சாதனத்தில் பார்க்க முடியும். இது மாணவர்களின் கற்றல் அனுபவத்தை மிகவும் உணர்வுப்பூர்வமாக மாற்றுகிறது.
மெய்நிகர் உலகத்தை உருவாக்கும் தொழில்நுட்பம்
வி.ஆர். (Virtual Reality) என்பது கம்ப்யூட்டர் மூலம் மெய்நிகர் உலகத்தை உருவாக்கும் தொழில்நுட்பம். இது ‘ஹெட் செட்’ அல்லது சிறப்பு சாதனங்களின் மூலம் அனுபவிக்கப்படும். மாணவர்கள் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, சூரிய குடும்பத்தை அருகிலிருந்து பார்ப்பதற்காக அல்லது விஞ்ஞான ஆய்வகத்தில் பங்கேற்கக் கூடிய அனுபவம் பெற முடியும்.
Leave a Reply