கோவை; விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட தங்கக்குடை, விநாயகர் சிலை உள்ளிட்ட அலங்கார பொருட்களை தேர்வு செய்து வாங்க பூமார்க்கெட்டுக்கு நேற்றே மக்கள் திரண்டனர்.ஆடி மாதத்தில் இருந்து விழாக்களும் சுப நிகழ்ச்சிகளும் நடந்து கொண்டே இருக்கும். அவ்வரிசையில் நாளை விநாயகர் சதுர்த்தி விமரிசையாக கொண்டாடப்படுகிறது.பூமார்க்கெட், டவுன்ஹால் காந்திபுரம் பகுதிகளில் அலங்கார பொருட்கள், விநாயகர் சிலைகள் விற்பனை நேற்றே துவங்கியது. விநாயகர் சிலைகள் அரை அடி முதல் 3 அடி வரையும் பல வண்ணங்களில் பல விதங்களில் விற்பனைக்கு வந்திருந்தன.

விநாயகரை அழகுபடுத்த தங்கநிறத்திலான குடைகள், அலங்கார மாலைகள், தோரணங்கள், வெள்ளெருக்கு மாலைகள், அருகம்புல் மாலைகள் விற்பனை செய்யப்பட்டன. சதுர்த்திக்கு தேவையான பிரசாதங்கள் தயாரித்து கொடுக்க ஆர்டர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
மோதகம், கொழுக்கட்டை, ஆறுவகையான சுண்டல், சர்க்கரை பொங்கல், இனிப்பு அவல், கார அவல் உள்ளிட்ட அனைத்து பொருட்களுக்கும் ஆர்டர்களை பெற்றுக்கொண்டனர். அதே சமயம் மலர் மாலைகள், பூக்களுக்கும் ஆர்டர்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன. மார்க்கெட்டுகள் களை கட்டின.
Leave a Reply