சூலுார்; அறங்காவலர் மற்றும் கோவில் பூஜாரியை மாற்றக்கோரி, சூலுாரில் உள்ள அறநிலையத்துறை ஆய்வாளர் அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டனர்.சுல்தான்பேட்டை அடுத்த ஜே. கிருஷ்ணா புரத்தில் மதுரைவீரன், பட்டத்தரசி அம்மன் கோவில் உள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்கு, புதிதாக அறங்காவலர் மற்றும் பூஜாரி நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று மதியம் சூலுாரில் உள்ள அறநிலையத்துறை ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, அறங்காவலர் மற்றும் பூஜாரியை மாற்ற கோரி மனு அளித்தனர்.
இதுகுறித்து பொது மக்கள் கூறுகையில்,’புதிய பூஜாரி நியமிக்கப்பட்டதில் இருந்து, பூஜைகள், விழாக்கள் முறையாக நடைபெறவில்லை. கோவில் எப்போதும் பூட்டியே உள்ளது.
சுவாமியை தரிசிக்க முடியாமல் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். இதுகுறித்து, பூஜாரியிடம் கேட்டால், முறையாக பதில் அளிப் பதில்லை.
பரம்பரையாக கோவிலை நிர்வகித்து வருவோரை அறங்காவலராக நியமிக்காமல், தகுதியில்லாத நபரை நியமித்துள்ளனர். இரு வரையும் மாற்ற வேண்டும் என, மனு அளித்துள்ளோம்,’ என்றனர்.
Leave a Reply