நம்மூர்லயும் அடிக்குது வெயிலு; போன வருஷத்தை விட குறைவு

கோவை ;தமிழகத்தின் பல பகுதிகளில், கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கோவையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் குறைவாக இருப்பதாக, வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Latest Tamil News

ஏப்.,25, 26 ஆகிய தேதிகளில், மாநிலத்தின் சில பகுதிகளில், வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கலாம் என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதன்படி, கோவையிலும் வெப்பம் அதிகரித்ததற்கான அறிகுறிகள் இருந்தாலும், கடந்த ஆண்டு பதிவான, 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்துடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு வெப்பநிலை குறைவாகவே பதிவாகியுள்ளது.
இது குறித்து, வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் சத்தியமூர்த்தி கூறியதாவது:

Latest Tamil News

தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து வந்தாலும், கோவையில் வெயிலின் தாக்கம் சராசரி அளவை விட அதிகரிக்கவில்லை.

ஏப்.,21 முதல் 25 வரையிலான நாட்களில், கோவையில் அதிகபட்ச வெப்பநிலை, 35.8 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 35.4 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது.

காலை நேரக் காற்றின் ஈரப்பதம் 80 சதவீதமாகவும், மாலை நேரத்தில் 30 — 40 சதவீதமாகவும் இருந்தது. இது சாராசரி அளவாக இருக்கிறது. 0.1 முதல் 0.2 டிகிரி வரை மட்டுமே வெப்பம் அதிகரித்துள்ளது.

இதே சூழல் தொடர்ந்தால், எதிர்வரும் நாட்களில் வெப்பநிலை மேலும் 1 — 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும். 38 டிகிரி செல்சியஸ் வரை, வெப்பம் பதிவாக வாய்ப்பு உள்ளது. எனவே, மக்கள் அச்சப்பட தேவையில்லை. ஆனால், வெயிலில் வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது.

இவ்வாறு, அவர் கூறினார்.