கோவை; ஆத்துப்பாலம் அடுத்த சுண்ணாம்பு காளவாய் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நேற்று நடந்தது. மாநகராட்சியின், 86வது வார்டு மக்களுக்காக நடந்த இம்முகாமில், 13 துறைகளை சார்ந்த அலுவலர்கள் மனுக்களை பெற்றனர்.மகளிர் உரிமைத்தொகை கோரியே அதிகளவு விண்ணப்பங்கள் வந்தன. மாலை 4 மணிக்கு முகாம் முடிவடையும் நிலையில், 3,250க்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்கள் கொடுத்திருந்தனர்.அத்துடன் விண்ணப்பத்துக்கான டோக்கன் தருவது நிறுத்தப்பட்டது. மக்கள் தொடர்ந்து வந்ததால் முகாம் நேரம் நீட்டிக்கப்பட்டது.

இதேபோல், 40வது வார்டுக்கு உட்பட்ட மக்களுக்காக வீரகேரளம் நகர கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் முகாம் நடத்தப்பட்டது. மேயர் ரங்கநாயகி துவக்கி வைத்தார். மகளிர் உரிமைத் தொகை மனு பெற சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டிருந்தது. சர்வர் பிரச்சனை ஏற்பட்டதால், விண்ணப்பிக்க வந்தவர்கள் வெகுநேரம் காத்திருந்தனர். நேற்று காலை முதல் மாலை வரை, இப்பகுதியில் சாரல் மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல், உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க, ஏராளமான பெண்கள் வந்து வரிசையில் நின்று, மனு கொடுத்தனர்.
Leave a Reply