பெ.நா.பாளையம்: அ.தி.மு.க., வலியுறுத்தியதால்தான், தமிழக பெண்களுக்கு உரிமை தொகை வழங்க ஸ்டாலின் அரசு முன் வந்தது என, அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி பேசினார்.பெரியநாயக்கன்பாளையத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி பேசுகையில்,”தி.மு.க., ஆட்சி என்பது குடும்ப ஆட்சி.அங்கு மன்னராட்சி போல வாரிசு அரசியல் தான் உள்ளது. வரும், 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெறும்.

தற்போதைய தி.மு.க., ஆட்சியில் எல்லா துறைகளிலும் லஞ்சம் பெருகிவிட்டது. கோவையில் சிறு, குறு தொழிற்சாலைகள் ஏராளமாக உள்ளன. தி.மு.க., அரசின் மின்கட்டண உயர்வால், தொழில்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க., சட்டசபையிலும், பொதுக்கூட்டங்களிலும் பெண்களுக்கு உரிமை தொகை வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தியதால்தான், தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின்பு, 28 மாதங்கள் கழித்து பெண்களுக்கு உரிமை தொகையை வழங்க முன் வந்தது. கடந்த அ.தி.மு.க., ஆட்சி சிறந்த ஆட்சி என்பதற்கு மேட்டுப்பாளையம் ரோட்டில் கட்டப்பட்டுள்ள பாலங்களே சாட்சி,” என்றார்.
கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் வேலுமணி, அ.தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் அருண்குமார், மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வராஜ் உள்ளிட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Leave a Reply